உள்ளத்து
உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல்
அமைந்துள்ளது
உணர்வுகளை
ஆங்கிலத்தில் Emotion என்கிறோம்.
உடலசைவு
மொழிகளை ஆங்கிலத்தில் Body language என்கிறோம்..
முகத்தில் தோன்றும் உணர்வுகளை Emoji என்ற குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம்..
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்பார் திருவள்ளுவர்.
தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலைப் படிப்பதால் இலக்கியங்களில் வெளிப்படும் உணர்வுகளை முழுமையாக அறிந்துகொள்ளமுடியும்
நகையே
அழுகை இளிவரல் மருட்கை
அச்சம்
பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
- 1197 என்றார் தொல்காப்பியர்
இந்த எட்டு மெய்ப்பாடுகளும் நான்கு நான்காக உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றை விரிவாகக் காண்போம்
நகை -
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து என்றார் திருவள்ளுவர்
இளமை
குழல்இனிது
யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் என்றார் திருவள்ளுவர்
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும்,
இடைப்படக்
குறுகுறு நடந்து,
சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும்,
கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட
விதிர்த்தும்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே என்பார்
(புறம் : 188) பாண்டியன் அறிவுடைநம்பி | |
அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
மடம்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம்
படான் பிறர் படைமயக் குறினே
என்று உரைத்துள்ளார்.
https://www.gunathamizh.com/2011/10/blog-post_29.htm
அழுகை –
இளிவு
-
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
இழிவுதரும்
செயல்களை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்
இழவு
-
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
அசைவு
–
புறநானூற்றில் தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய பாடல் அசைவுக்குத் தக்க சான்றாகும்.
வறுமை
-
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது என்றார் திருவள்ளுவர்
இளிவரல்
மூப்பு -
“பல்சான்றீரே பல்சான்றீரே
கயல்முள் அன்ன
நரைமுதிர் திரைகவுள் என
நரிவெரூஉத்தலையார்
புறநா- 195
https://www.gunathamizh.com/2013/01/blog-post.html
பிணி-
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ?
சேய்த்தோ? கிள்ளி வளவன் பாடியதாக ஒரு
புறப்பாடல் உண்டு.
வருத்தம்
குழவி இறப்பினும்,
ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று
வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின்
இடர்ப்படுத்து இரீஇய
மதுகை இன்றி,
வயிற்றுத் தீத் தணியத்,
என்ற
சேரமான் கணைக்கா லிரும்பொறையின்
புறநானுற்றுப் பாடலைக் குறிப்பிடலாம்
(புறநானூறு-74)
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே.
192. புறநானூறு
கணியன் பூங்குன்றனார்.
அணங்கு
-
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
விலங்கு -
புலி குறவரின் மேல் பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்ணை வலியை நீக்கவும் புண்ணை ஆற்றவும் கொடிச்சியர் பாடல் பாடியதாக
மலைபடுகடாம் என்ற நூலில் குறிப்புள்ளது.
கள்வர்
– ஆறலைக்
கள்வர்களையும் மயக்கும் தன்மை யாழிசைக்கு உண்டு என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.
இறை
- முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
கல்வி –
ஒரு குடிப் பிறந்த
பல்லோருள்ளும்
முத்தோன் வருக
என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு
அரசும் செல்லும்
என்று கல்வியால் கிடைக்கும் பெருமிதத்தை
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ளார்
தருகண் -
சிற்றில் நல் தூண்
பற்றி,
'நின் மகன்
யாண்டு உளனோ?'
என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும்
அறியேன்;
ஓரும்
புலி சேர்ந்து போகிய
கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ,
போர்க்களத்தானே!
என்ற காவற் பெண்டு பாடல்
வீரம் காரணமாக வெளிப்படும் பெருமிதமாகும்
இசைமை –
ஈதல் இசைபட வாழ்தல்
அது அல்லது
ஊதியம் இல்லை
உயிர்க்கு என்று சொன்ன திருவள்ளுவர்,
கொடை-
கடையேழு வள்ளல்களும் கொடையால் கிடைத்த பெருமிதத்தை உணர்ந்தவர்களாவர்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற என்பார் திருவள்ளுவர்
பூங்கணுத்திரையார் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில்,
மீனை உண்ணக்கூடிய கொக்கின் சிறகினைப் போல
வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதியவளின் இளைய மகன் தன்னைத் தாக்கவந்த யானையைக்
கொன்று தானும் இறந்து போனான் என்ற செய்தியைக் கூறக் கேட்டாள் அத்தாய், அவனை ஈன்ற
பொழுதினும் உவகை மிகக் கொண்டாள்..
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக்
கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து
பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற
ஞான்றினும் பெரிதே
என்பதே அப்பாடல் இப்பாடலில் உவகை என்றே
வந்தாலும். இதை பெருமகிழ்ச்சி என்று எடுத்துக்கொள்ள இயலாது.
இதற்குள் நகை, அழுகை, பெருமிதம் எனப்
பல உணர்வுகள் நிறைந்துள்ளன. கண்ணீர் துன்பத்தில் மட்டுமா வரும்.. இன்பம் எல்லை
மீறினாலும் கண்ணீர் வருமல்லவா..
இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை
முழுமையாக உணர தொல்காப்பிரின் மெய்ப்பாட்டியலை ஆழ்ந்து கற்போம். இன்றைய உளவியல்
அணுகுமுறைகளுக்கெல்லாம் தொல்காப்பியம் அடிப்படையானது என்பதை உணர்வோம் உணர்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக