பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 7 அக்டோபர், 2024

புகழ்I வானொலி உரை



ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட – அவன்

எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட – அவன்

எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

 ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... அவன் இறந்தபின்...

 எவ்வளவு மனங்களில்..எவ்வளவு இடங்களை...தன் அன்பால்ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

 

வியாழன், 3 அக்டோபர், 2024

சொல்லுக சொல்லை...

 


 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)

என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.

மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க என்ன பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதனை அறிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பது பழமொழி

திங்கள், 30 செப்டம்பர், 2024

அறிவெனப்படுவது…


 அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என உரைக்கிறது கலித்தொகை அறிவில்லாதவர்களின் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பது இதன் பொருள்.

கல்வி அறிவு, கேள்வி அறிவு, அனுபவ அறிவு,இயற்கை அறிவு, நுண்ணறிவு, என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும் என்பது வள்ளுவர் வாக்கு.     

திருக்குறளில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் மட்டுமின்றிப் பல குறட்பாக்களில் அறிவைப் பற்றி திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

 

அறிவு என்றால் என்ன? அறிவை எதற்கு, எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்று வள்ளுவரைக் கேட்டால்..

 

புதன், 11 செப்டம்பர், 2024

தேமதுரத் தமிழோசை - பாரதியார் நினைவுநாள்


மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. தமிழ் வளர்த்த சான்றோர் பெருமக்களுள் மகாகவி பாரதியார் குறிப்பிடத்தக்கவராவர்.

நல்லதோர் வீணை செய்தே அதை

நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

சனி, 10 ஆகஸ்ட், 2024

தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகள்


மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பே மின்னூல் ஆகும். மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் மின்னூல்களை உலகளாவிய மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். இலவசமாகக் கூட மின்னூல்களை உருவாக்கி அதன் வழி வருமானம் பெறவும் இயலும். தமிழ் மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்துடன் தமிழ் மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளையும் இக்கட்டுரை வழியாகக் காண்போம்.

சனி, 6 ஜூலை, 2024

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - ப.ஜீவானந்தம்


       ப.ஜீவானந்தம் அவர்கள் காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, நாத்திகராக, தமிழ்ப் பற்றாளராகபொதுவுடைமை இயக்கத் தலைவராக மக்கள் மனதில் நிலைத்தவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவானந்தம் அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை  என்ற இவரது கவிதைக்குச் செல்லும் முன், வள்ளுவர், பாரதியார், வள்ளலார், திருமூலர் ஆகியோரின் சிந்தனைகளை ஒப்புநோக்கிய பின் செல்வோம்

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராதியல்வது நாடு

பசி, நோய், பகை இல்லாததே நாடு 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றியான் 

பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும்  என்று சினம் கொண்டார் திருவள்ளுவர்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி. 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க வள்ளலார். 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று திருமூலர் கூறுவார்..

ப.ஜீவானந்தம் அவர்களின் கவிதைக்குச் செல்வோம் 

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்

பட்டினி அழுகை கேட்டதில்லை

இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்

இட்டு வணங்குகிறார் முக்திக் கென்றே.

 சாமியைக் கல் என்று சொல்லிவிட்டாரே என்று ஜீவானந்தம் அவர்கள் மீது கோபப்படுவதைவிட

புதன், 26 ஜூன், 2024

சிலப்பதிகாரம் - காட்சிக் காதை விளக்கம்

 


மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,

வெள்ளி, 7 ஜூன், 2024

திருக்குறளில் தலைமைப் பண்புகள் - Leadership Qualities in Thirukkural - (1600 வது பதிவு)

(தமிழ் இலக்கியம், கணினித் தமிழ் சார்ந்து 16வது ஆண்டாக தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து வரும் பார்வையளார்களான உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். )

 




தலைமைப் பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட தலைமைப் பண்பு உண்டு. ஒரு கூட்டதை வழிநடத்தக்கூடிய பண்பு தலைமைப் பண்பாகும். தலைமைப் பதவியில் இருப்பதாலேயே ஒருவர் தலைவராகிவிடுவதில்லை. தலைமைப் பண்புக்குப்  பல தகுதிகள் உண்டு.

தலைமைப் பண்புள்ளவர்களால் பதவி பெருமை பெறுகிறது. 

தலைமைப் பண்பில்லாதவர்கள் அந்தப் பதவியால் பெருமை பெறுகிறார்கள்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பண்புகளும் தலைமைப் பதவிக்கான நற்தகுதிகளாகக் கருதலாம். திருக்குறளில் திருவள்ளுவர் தலைமைப் பண்பு பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். நவில்தொறும் நூல் நயம் என்று அவர் சொல்லுவதுபோல திருக்குறளில் தலைமைப் பண்பு என்று தேடினால் தேடுவோர் அறிவுக்கேற்ப பல குறள்களை இனம்காண முடியும்.

திருவள்ளுவர் காலத்தில் தலைமை என்றால் அரச பதவியே இருந்திருக்கவேண்டும். இறைமாட்சி என்ற அதிகாரத்தில் அரசனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். அரசனுக்கு அடுத்து அமைச்சர்களின் பெருமைகளை உரைத்துள்ளார். அரசனும் அமைச்சரும் மட்டும் தான் தலைமைப் பண்புக்குரியவர்களா… என்று சிந்தித்தால் அவர்கள் மட்டுமில்லை.. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தலைமைப் பண்பு உள்ளது ஆனால் அதைப் பலரும் உணர்வதில்லை. உணர்பவர்கள் யாவரும் தலைவரகலாம் என்பது புரியும்.

 தலைமைப் பண்புக்கான தகுதிகளாக திருக்குறளில் நான் உணர்ந்த பண்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

 

வியாழன், 23 மே, 2024

புறங்கூறாமை


நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..

அவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்கிறோம்..அந்த ஒப்பீடு சிலருக்கு  முன்னேறவேண்டும் என்று தன்னம்பிக்கையைத் தருகிறது. சிலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

 ஒருவர் இருக்கும்போது அவரது குறைகளை அவரிடமே சொல்லவேண்டும்

அவர் இல்லாதபோது அவரது நிறைகளை மட்டுமே பேசவேண்டும்..

மாறாக ஒருவர் இல்லாதபோது குறைகளையும, இருக்கும்போது நிறைகளையும் பேசுவது பலரின் வழக்கமாக மாறிவருகிறது.

 

திங்கள், 20 மே, 2024

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

 



வினை விதைத்தவன் வினை அறுப்பான்,

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்..

 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.- 319

பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமைநமக்கு பிற்பகல் தாமே வரும்

என்பது வள்ளுவர் வாக்கு.

சனி, 18 மே, 2024

பொறுமையின் சிறப்பு



பொறுமை (Patience) என்பது துன்பம் ஏற்படும்போது உணர்ச்சவசப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலையே..

சகிப்புத் தன்மை, நிதானம், அமைதி, சிந்தித்தல் ஆகிய படிநிலைகளைக் கடந்தவர்களே பொறுமைசாலிகள் எனப்படுவர்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மானப் பெரிது -124

எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் அடங்கியிருத்தல் மலையை விடப் பெரியது என்கிறார் திருவள்ளுவர்.

சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம்

பெரியொர் பொறுப்பது கடனே

என்றார் அதிவீர ராம பாண்டியர்.

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது வெட்கப்பட வேண்டும்

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும் என்றுரைக்கிறார் நல்லாதனார்.

பொறுமையை இழப்பது என்பது போரில் தோற்பதற்குச் சமமானது என்றார் காந்தியடிகள். அவரது அகிம்சைக்கோட்பாட்டின் அடிப்படையாக அமைந்தது பொறுமை என்பதை நாம் உணரவேண்டும்.

சனி, 11 மே, 2024

அச்சம் தவிர் - சான்றோர் சிந்தனை


இளங்கன்று பயமறியாது, மடியிலே பயமிருந்தால் வழியிலே பயம் இருக்கும்,

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்..

என்று அச்சத்தைப் பற்றி பழமொழிகள் உண்டு.

 தொல்காப்பியர் உடல் மொழிகளை எட்டுவகையாக மெய்ப்பாட்டியலில் பிரித்துரைக்கிறார். அவற்றுள் அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்ற நான்கு காரணங்களால் அச்சம் தோன்றும் என்றுரைக்கிறார்.

 திருவள்ளுவர் தீவினையச்சம், அவையச்சம் என்ற இரு அதிகாரங்களில் அச்சம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அறிவுடைமை என்ற அதிகாரத்தில்,

 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல் என்று குறிப்பிடுகிறார். உட்பகை என்ற அதிகாரத்தில்,

 

வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. - 882

வாள்போன்ற வெளிப்பகைக்கு அஞ்சவேண்டாம் உறவுகள்போன்ற உட்பகைக்கு அஞ்சுக என்கிறார்.

மகாகவி பாரதியார்.........

செவ்வாய், 7 மே, 2024

வெற்றி & தோல்வி பற்றிய 50 பொன்மொழிகள்

 


1. இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக – திருவள்ளுவர்

 

2. ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு – திருவள்ளுவர்

 

3. காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம் – திருவள்ளுவர்

 

4. சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையாரை வெல்லலாகாது  – திருவள்ளுவர்

 

5. சொந்தமண்ணில் யாரையும் வெல்வது அரிது – திருவள்ளுவர்

 

6. நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். - ஹில்

 

7. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.- அரிஸ்டாட்டில்