அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என உரைக்கிறது கலித்தொகை அறிவில்லாதவர்களின் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பது இதன் பொருள்.
கல்வி அறிவு, கேள்வி
அறிவு, அனுபவ அறிவு,இயற்கை அறிவு,
நுண்ணறிவு, என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு
துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.
இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும் என்பது வள்ளுவர் வாக்கு.
திருக்குறளில்
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் மட்டுமின்றிப் பல குறட்பாக்களில் அறிவைப் பற்றி
திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.
அறிவு என்றால் என்ன? அறிவை எதற்கு,
எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்று வள்ளுவரைக் கேட்டால்..