பக்கங்கள்
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
புதன், 26 ஜூன், 2024
சிலப்பதிகாரம் - காட்சிக் காதை விளக்கம்
வெள்ளி, 7 ஜூன், 2024
திருக்குறளில் தலைமைப் பண்புகள் - Leadership Qualities in Thirukkural - (1600 வது பதிவு)
(தமிழ் இலக்கியம், கணினித் தமிழ் சார்ந்து 16வது ஆண்டாக தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து வரும் பார்வையளார்களான உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். )
தலைமைப் பண்புள்ளவர்களால் பதவி பெருமை பெறுகிறது.
தலைமைப் பண்பில்லாதவர்கள் அந்தப் பதவியால் பெருமை பெறுகிறார்கள்.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பண்புகளும் தலைமைப்
பதவிக்கான நற்தகுதிகளாகக் கருதலாம். திருக்குறளில் திருவள்ளுவர் தலைமைப் பண்பு பற்றிய
பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். நவில்தொறும் நூல் நயம் என்று அவர் சொல்லுவதுபோல
திருக்குறளில் தலைமைப் பண்பு என்று தேடினால் தேடுவோர் அறிவுக்கேற்ப பல குறள்களை இனம்காண
முடியும்.
திருவள்ளுவர் காலத்தில் தலைமை என்றால் அரச பதவியே இருந்திருக்கவேண்டும்.
இறைமாட்சி என்ற அதிகாரத்தில் அரசனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். அரசனுக்கு அடுத்து
அமைச்சர்களின் பெருமைகளை உரைத்துள்ளார். அரசனும் அமைச்சரும் மட்டும் தான் தலைமைப் பண்புக்குரியவர்களா…
என்று சிந்தித்தால் அவர்கள் மட்டுமில்லை.. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தலைமைப் பண்பு
உள்ளது ஆனால் அதைப் பலரும் உணர்வதில்லை. உணர்பவர்கள் யாவரும் தலைவரகலாம் என்பது புரியும்.