பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 7 மே, 2024

வெற்றி & தோல்வி பற்றிய 50 பொன்மொழிகள்

 


1. இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக – திருவள்ளுவர்

 

2. ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு – திருவள்ளுவர்

 

3. காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம் – திருவள்ளுவர்

 

4. சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையாரை வெல்லலாகாது  – திருவள்ளுவர்

 

5. சொந்தமண்ணில் யாரையும் வெல்வது அரிது – திருவள்ளுவர்

 

6. நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். - ஹில்

 

7. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.- அரிஸ்டாட்டில்    

 

8. வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். -டிஸ்ரேலி    

 

9. எதிலுமே உண்மையை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வெற்றி அடைகிறீர்களோ இல்லையோ, அந்த முயற்சியே உங்களுக்கு விழிப்புணர்வை  அளிக்கும். - டாரோ                                                                 

 

10. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு

இன்றியமையாமையாகும். – விவேகானந்தர்

 

11. ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்

 

12.  பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும். – வில்லியம் பெதர்

 

13. வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது. - ஹாப்பர்

 

14. வெற்றி, தான் வந்த வழியில் எல்லாத் தவறுகளையும் அழித்துவிடும்- யாரோ

 

15. ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்  - சார்லஸ் பக்ஸ்டன்

 

16. உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். - நெப்போலியன்[

 

17. என்னைச் சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை – தோல்வி - யாரோ

 

18. வாழ்வில் வெற்றிபெற நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ

 

19. எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை - எடிசன்

 

20. வெற்றி என்பது, இலட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

 

21. வெற்றி என்பது உயரம் தாண்டுதலோ, நீளம் தாண்டுதலோ அல்ல!

அது ஒரு மராத்தான் ஓட்டத்தைப் போன்றது.. – யாரோ.

 

22. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்! - சுபாஷ் சந்திரபோஸ்.

 

23. எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள். - லாயிட் ஜோன்ஸ்

 

24. மன உறுதியுள்ளவன்,  மிகப் பெரிய கஷ்டங்களையும் கூட,  எளிதாக தாண்டி வெற்றிபெற்று விடுகிறான் - எச்.ஜி.வெல்

 

25. நாளை! நாளை!! என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது

வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.       - நெப்போலியன்.

 

26. உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது. எமர்சன்.

 

27. தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடிவெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.  ஓவிட்

 

28. பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே வெற்றி கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கிறது – ஹெக்டர்

 

29. மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல! -தாமஸ் ஹூட்

 

30. கருமியை ஈகையாலும், பொய்யை மெய்யாலும் வெற்றிகொள்ள முடியும்  

- புத்தர்

 

31. நீங்கள் வெற்றிபெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உங்கள் சிந்தனையே தீர்மானிக்கிறது. - ஹென்றி ஃபோர்ட்

 

32. கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதைத் தாமதப்படுத்துவது.

-செனேகா

 

33. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்

 

34. ஈடுபாடு இல்லாமல் உங்களால் வெற்றிபெற முடியாது. ஈடுபாட்டுடன் உங்களால் தோல்வியடைய முடியாது. - அப்துல் கலாம்

 

35. தோல்வியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டால், உண்மையில் நீங்கள் தோற்கவில்லை. - ஜிக் ஜிக்லர்

 

36. தோல்வி என்பது கடினமானது, அனால், எதையுமே முயற்சிக்காமல் இருப்பது தோல்வியை விட மோசமானது – தியோடர் ருஸ்வேல்ட்

 

37. உற்சாகத்தை இழப்பதும் ஒரு வகையில் மரணம் போலத்தான். தோற்கடிக்கப்படுவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொள்வது போன்றது அது – ராமரட் மோ சப்ரிசா

 

38. தோல்வி என்பது முதல்படியும் அல்ல, ஏணியும் அல்ல. தோல்வி தோல்விதான் அதற்கு முழு பொறுப்பும் நீதான் – யாரோ

 

39. வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே நீங்கள் வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும். – சாக்ரடீஸ்

 

40. தோல்வியை உங்கள் இதயத்திற்கு செல்ல விடாதீர்கள், வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள். - வில் ஸ்மித்

 

41. வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி முயற்சியை நிறுத்துவதே. -நெப்போலியன் ஹில்

 

42. தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதி. - ஹஃபிங்டன்

 

43. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து

கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. – லெனின்

 

44. என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும், எல்லோரும் ஏதோ ஒன்றில் தோல்வியடைகிறார்கள், ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. - மைக்கேல் ஜோர்டான்

                                                                                               

45. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் உள்ள ஒரே வேறுபாடு செயலாற்றும் திறனாகும். - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

 

46. சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே மேன்மையின் உரைகல்– திருவள்ளுவர்

 

47. சிறுபடையும் இடமறிந்து போரிட்டால், பெரும்படையை வெல்லும்– திருவள்ளுவர்

 

48. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்

 

49. வெற்றியாளர்கள் தோல்வியைக் கண்டு அஞ்ச மாட்டார்கள், ஆனால் அதில் இருந்து கற்றுக்கொண்டு வளர வேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்வார்கள். - ராபர்ட் கியோசாகி

 

50. வெற்றி பெற வேண்டும் என்ற எனது உறுதி போதுமானதாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் முந்தாது. – மண்டினோ                                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக