பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 23 மே, 2024

புறங்கூறாமை


நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..

அவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்கிறோம்..அந்த ஒப்பீடு சிலருக்கு  முன்னேறவேண்டும் என்று தன்னம்பிக்கையைத் தருகிறது. சிலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

 ஒருவர் இருக்கும்போது அவரது குறைகளை அவரிடமே சொல்லவேண்டும்

அவர் இல்லாதபோது அவரது நிறைகளை மட்டுமே பேசவேண்டும்..

மாறாக ஒருவர் இல்லாதபோது குறைகளையும, இருக்கும்போது நிறைகளையும் பேசுவது பலரின் வழக்கமாக மாறிவருகிறது.

 

திங்கள், 20 மே, 2024

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

 



வினை விதைத்தவன் வினை அறுப்பான்,

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்..

 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.- 319

பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமைநமக்கு பிற்பகல் தாமே வரும்

என்பது வள்ளுவர் வாக்கு.

சனி, 18 மே, 2024

பொறுமையின் சிறப்பு



பொறுமை (Patience) என்பது துன்பம் ஏற்படும்போது உணர்ச்சவசப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலையே..

சகிப்புத் தன்மை, நிதானம், அமைதி, சிந்தித்தல் ஆகிய படிநிலைகளைக் கடந்தவர்களே பொறுமைசாலிகள் எனப்படுவர்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மானப் பெரிது -124

எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் அடங்கியிருத்தல் மலையை விடப் பெரியது என்கிறார் திருவள்ளுவர்.

சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம்

பெரியொர் பொறுப்பது கடனே

என்றார் அதிவீர ராம பாண்டியர்.

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது வெட்கப்பட வேண்டும்

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும் என்றுரைக்கிறார் நல்லாதனார்.

பொறுமையை இழப்பது என்பது போரில் தோற்பதற்குச் சமமானது என்றார் காந்தியடிகள். அவரது அகிம்சைக்கோட்பாட்டின் அடிப்படையாக அமைந்தது பொறுமை என்பதை நாம் உணரவேண்டும்.

சனி, 11 மே, 2024

அச்சம் தவிர் - சான்றோர் சிந்தனை


இளங்கன்று பயமறியாது, மடியிலே பயமிருந்தால் வழியிலே பயம் இருக்கும்,

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்..

என்று அச்சத்தைப் பற்றி பழமொழிகள் உண்டு.

 தொல்காப்பியர் உடல் மொழிகளை எட்டுவகையாக மெய்ப்பாட்டியலில் பிரித்துரைக்கிறார். அவற்றுள் அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்ற நான்கு காரணங்களால் அச்சம் தோன்றும் என்றுரைக்கிறார்.

 திருவள்ளுவர் தீவினையச்சம், அவையச்சம் என்ற இரு அதிகாரங்களில் அச்சம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அறிவுடைமை என்ற அதிகாரத்தில்,

 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல் என்று குறிப்பிடுகிறார். உட்பகை என்ற அதிகாரத்தில்,

 

வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. - 882

வாள்போன்ற வெளிப்பகைக்கு அஞ்சவேண்டாம் உறவுகள்போன்ற உட்பகைக்கு அஞ்சுக என்கிறார்.

மகாகவி பாரதியார்.........

செவ்வாய், 7 மே, 2024

வெற்றி & தோல்வி பற்றிய 50 பொன்மொழிகள்

 


1. இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக – திருவள்ளுவர்

 

2. ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு – திருவள்ளுவர்

 

3. காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம் – திருவள்ளுவர்

 

4. சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையாரை வெல்லலாகாது  – திருவள்ளுவர்

 

5. சொந்தமண்ணில் யாரையும் வெல்வது அரிது – திருவள்ளுவர்

 

6. நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். - ஹில்

 

7. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.- அரிஸ்டாட்டில்