Tamil
Electrical Content and Developing Technologies
முனைவா்
இரா.குணசீலன்/ Dr.R.GUNASEELAN
Valluvar said that counting and
writing are like eyes for the life we live. Since we understand the
connection between numbers 0,1 and the Tamil text, and providing the electrical
content to understand the computer, Tamil has grown to many levels on the
Internet today. This article deals with the e-content of Tamils and the technologies that create them to adapt to
the ever-changing technological changes such as websites, blogs, android apps,
dictionaries, translator techniques, Optical Character Recognition, e-books,
videos, audio books.
Keywords – Dr.R.Gunaseelan, Tamil E -
Content, Tamil Electrical Content,
E-book, web, blog, apps, ocr,
dictionaries, முனைவா் இரா.குணசீலன், தமிழ் மின் உள்ளடக்கங்கள், மின்னூல்கள், அகராதிகள்,
விக்கிப்பீடியா,
எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக்
கண்களைப் போன்றன என்றார் வள்ளுவர். 0,1 என்ற எண்களுக்கும், தமிழ் எழுத்துகளுக்குமான
தொடர்பைப் புரிந்துகொண்டு, கணினிக்குப் புரியுமாறு மின் உள்ளடக்கங்களை வழங்கியதால்
இன்று இணையப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்சியடைந்துள்ளது. இணையதளங்கள், வலைப்பதிவுகள்,
குறுஞ்செயலிகள், அகராதிகள், மொழிமாற்றி நுட்பங்கள், எழுத்துணரி நுட்பங்கள், மின்னூல்கள்,
காணொளிகள், ஒலிநூல்கள் என நாள்தோறும் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப
தமிழில் உள்ள மின் உள்ளடக்கங்களையும், அவற்றை உருவாக்கும் நுட்பங்களையும் இக்கட்டுரை
இயம்புகிறது.
இணையதளங்களில்
தமிழ் மின் உள்ளடக்கங்கள்
தமிழ் மொழிசார்ந்த பல்வேறு செய்திகள் இணையதளங்களில் எழுத்து
வடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் மின் உள்ளடக்கங்களாகக் கிடைக்கின்றன. கல்வி நிறுவனங்கள்
மட்டுமின்றி தனி மனிதர்களும் இணையதளங்களை உருவாக்கி
தமிழ் சார்ந்த செய்திகளை உள்ளீடு செய்ய முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ்
எழுத்துக்களைக் கற்பித்தல் தொடங்கி தமிழ் ஆராய்ச்சி வரை இன்று பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சான்றாக தமிழம் நெட், தமிழ் அநிதம் அடிப்படைத்
தமிழ் கற்க இத்தளங்கள் உதவுகின்றன. தமிழ் இலக்கியத் தொடரடைவு தமிழாய்வு
மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு துறைசார்ந்த பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்கள்
பல ஆய்வுதொடர்பான பல்வேறு சிந்தனைகளை மின் உள்ளடக்கங்களாகக் வழங்குகின்றன. தமிழ் கற்றல்
கற்பித்தல் முதல் கணினித் தமிழ் ஆய்வுகள் வரை தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையதளம்
உதவியாக(3) உள்ளது. பல்வேறு துறை கற்றலுக்கும்
இன்று என்.பி.டெல், சுவயம், யுடிமி போன்ற இணையதளங்கள் பயன்படுகின்றன. என்றாலும் இந்த
இணையதளங்களில் தமிழ் சார்ந்த படிப்புகளை மின் உள்ளடக்கங்களாக உருவாக்கவேண்டிய நிலையில்தான்
நாம் உள்ளோம். ஆசிரியர்கள் தமிழ் சார்ந்த பாடங்களை உருவாக்குவதும், மாணவர்களை அதற்கு
நெறிப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது.