கற்பித்தல்
வரலாறு என்பது ஆசிரியர் மாணவர்க்கு பாடம் கற்பித்தலின் இயல்பையும் முறையையும் விவரிக்கின்றது. இது பாடம் சொல்லுதலின் வரலாறு நுவலும் திறன் ஈதல் இயல்பு என பல சொற்றொடர்களால்
குறிப்பிடப் பெற்றுள்ளது. இதனை பவணந்தி முனிவர்,
1. நூல் நுவல் திறன்
ஈதல்
இயல்பே இயம்பும் காலை
காலமும்
இடனும் வாலிதின் நோக்கி
சிறந்துழி
இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும்
பொருள் உள்ளத்து அமைத்து
விரையான்
வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன்
கொள் வகை அறிந்து அவன் உளம் கொளக்
கோட்டம்
இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப
36
கற்பிக்கும்
ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டியன,
1. காலத்தையும்
இடத்தையும் நன்கு ஆராய்தல்,
2. நல்ல
இடத்திலிருந்து வழிபடு தெய்வத்தை வணங்குதல்,
3. கற்பிக்கும்
பாடத்தை மனதில் பதியவைத்து நினைகொள்ளுதல்,
4. விரைந்து
சொல்லாமல், சினமில்லாமல் முகமலர்ச்சியுடன் இருத்தல்
5. மாணவனின்
தன்மையறிந்து நடத்துதல்
6. மாணவன்
தெளிவடையுமாறு மாறுபடற்ற மனத்துடன் கற்பித்தல்,