பதினெண்
கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 101 வெண்பாக்களால் பாடப்பட்டது. சுக்கு,
மிளகு, திப்பிலி எனும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தருவதுபோல ஒவ்வொரு பாடலிலும் மூன்று
நற்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
விழுமியம்
- சான்றாண்மை
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 6
பிறர்
தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும்,
தன்னை
விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,
பிறர்க்கு
கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.