ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு
சேக்சுபியர், பாரதிதாசன், வாணிதாசன்
ஆகியோர் படைப்புகளை ஆராய்ந்து காதலில் வீரமும், வீரத்தில்
காதலும் இருப்பதாக இக்கட்டுரை சான்றுகளுடன் இயம்புகிறது.
காதலும் வீரமும் தமிழரின் இருகண்கள். காதலில் வீரமும், வீரத்தில்
காதலும் நுட்பமான உள்ளீடுகளாக உள்ளன, மொழி எல்லைகளைக்
கடந்து இவ்வுணர்வுகள் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வில்லியம்
சேக்சுபியரின், ரோமியோ ஜூலியட், பாவேந்தர்
பாரதிதாசனின் புரட்சிக்கவி, வாணிதாசனின்
கொடிமுல்லை ஆகிய படைப்புகளில் காதல் அடிக்கருத்தியலாக இருந்தாலும் காதலில்
வீரத்தையும், வீரத்தில் காதலையும் படைப்பாளர்கள் நயம்பட
பதிவுசெய்துள்ளனர். ஒப்பீட்டு நிலையில் இக்கதைக்களங்களின் சிறப்பியல்புகளை
இக்கட்டுரை ஆராய்கிறது.