பக்கங்கள்
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
சனி, 28 ஆகஸ்ட், 2021
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021
ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50
1. ஒரு
மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை
அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். - கலிலியோ கலிலி
2. ஒரு தேசம்
ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று
பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர். டாக்டா்
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
3. ஒரு
ஆசிரியருக்கு ஆக்கப்பூர்வமான மனம் இருக்க வேண்டும். - டாக்டா் ஏ.பி.ஜே அப்துல்
கலாம்
4. கற்பித்தல்
என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில் ஒருவரின் பாத்திரம், திறமை
மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது.
மக்கள் என்னை ஒரு நல்ல
ஆசிரியராக நினைத்தால், அது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். டாக்டர்
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
5. சராசரி
ஆசிரியர் சிக்கலை விளக்குகிறார்; திறமையான ஆசிரியர் எளிமையை
வெளிப்படுத்துகிறார். - ராபர்ட் பிரால்ட்.
6. ஆசிரியர்
கற்பிப்பவர் அல்ல, யாரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிறாரோ
அவரே ஆசிரியர். - ஏ.எம். காஷ்பிரோவ்ஸ்கி
7. ஆசிரியர்கள்
கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய
வேண்டும். - சீன பழமொழி
8. இதை நீங்கள்
படிக்க முடிந்தால், ஒரு ஆசிரியருக்கு நன்றி. - அமெரிக்க
பழமொழி
9. ஒருவர்
கற்பிக்கும்போது, இருவர் கற்றுக்கொள்கிறார்கள். - ராபர்ட்
ஹெய்ன்லைன்
10. கற்றலில்
நீங்கள் கற்பிப்பீர்கள், கற்பிப்பதில் நீங்கள்
கற்றுக்கொள்வீர்கள்.- பில் காலின்ஸ்
11. கல்வி
என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து
இன்னொரு தலைமுறைக்கு செல்கிறது."- ஜி.கே செஸ்டர்டன்
12. உண்மையிலேயே
அற்புதமான ஆசிரியரைக் கண்டுபிடிப்பது அரிது, பிரிவது கடினம்,
மறக்க இயலாது.- தெரியவில்லை
13. கற்பிக்கத்
துணிந்தவர் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது. - ஜான் சி. டானா
14. நல்ல
ஆசிரியர்களுக்கு மாணவர்களில் சிறந்தவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது
தெரியும். - சார்லஸ் குரால்ட்
15. வீட்டுப்பாடம்
தவிர, வீட்டிற்கு எடுத்துச் செல்ல உங்களுக்கு ஏதாவது
கொடுக்கும் ஒரு ஆசிரியரை நான் விரும்புகிறேன்.- லில்லி டாம்லின்
16. நல்ல போதனை
என்பது சரியான பதில்களைக் கொடுப்பதை விட சரியான கேள்விகளைக் கொடுப்பது. - ஜோசப்
ஆல்பர்ஸ்
17. வாழ்க்கையின்
வெற்றிக்கு கல்வியே முக்கியமாகும், மேலும் ஆசிரியர்கள்
தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். - சாலமன்
ஆர்டிஸ்
18. தெரிந்தவர்கள்
செய்கிறார்கள். புரிந்துகொள்பவர்கள் கற்பிக்கிறார்கள். - அரிஸ்டாட்டில்
19. நாளை
நீங்கள் இறப்பது போல் வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போல்
கற்றுக்கொள்ளுங்கள். - மகாத்மா காந்தி
20 உண்மையில்
ஞானமுள்ள ஆசிரியர் உங்களை தனது ஞானத்தின் வீட்டிற்குள் நுழைய விடாமல் உங்களை
உங்கள் மனதின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.- கலீல் ஜிப்ரான்
21. ஆசிரியரின்
பாராட்டு கல்வி உலகைச் சுற்றச் செய்கிறது. - ஹெலன் பீட்டர்ஸ்
22. நான்
யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, என்னால் அவர்களை
சிந்திக்க வைக்க முடியும். - சாக்ரடீஸ்
23. வாழ்நாளில்
ஒரு நல்ல ஆசிரியர் சில சமயங்களில் குற்றவாளியை திடமான குடிமகனாக மாற்றலாம். -
பிலிப் வைலி
24. சிறந்த
ஆசிரியர்கள் குழந்தைகளுடன் பச்சாதாபம் கொள்கிறார்கள், அவர்களை
மதிக்கிறார்கள், மேலும் ஒவ்வொருவரிடமும் ஏதாவது சிறப்பு
இருக்க முடியும் என்று நம்புகிறார்கள்.- ஆன் லிபர்மேன்
25. கற்பித்தல்
மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில். - யாரோ
26. கற்பித்தல்
என்பது புரிதலின் மிக உயர்ந்த வடிவம்.- அரிஸ்டாட்டில்
27. தங்களுக்கு
எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை அறிந்தவர்களே நல்ல ஆசிரியர்கள். தங்களுக்கு
தெரியாததை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைப்பவர்கள் மோசமான
ஆசிரியர்கள். - ஆர். வெர்டி
28. கல்விக்கூடம்
ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள்
தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்
29. நல்ல
ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்குகிறார்கள். - ஆஸ்ட்ரோகிராட்ஸ்கி எம்.வி.
30. ஒரு சிறந்த
தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். -
ஹெர்பர்ட்
31. உங்களைச்
சுற்றியுள்ள அனைவரும் உங்கள் ஆசிரியர். -
கென் கீஸ்
32. ஒரு
ஆசிரியரின் நோக்கம் மாணவர்களை தனது சொந்த உருவத்தில் உருவாக்குவது அல்ல, மாறாக தங்கள் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவது. -
யாரோ
33. மாணவர்களுக்கு
சிறந்ததை எவ்வாறு கொண்டு வருவது என்பது நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்.- சார்லஸ்
குரால்ட்.
34. சொல்வதை
நான் மறந்துவிடுவேன். எனக்கு கற்றுக்கொடுங்கள்
நான் நினைவில் கொள்கிறேன்.
என்னை ஈடுபடுத்துங்கள்
நான் கற்றுக்கொள்கிறேன். பெஞ்சமின் பிராங்க்ளின்
35. ஒரு நல்ல ஆசிரியர் பதில்களை விட
அதிகமான கேள்விகளைக் கேட்கிறார். - ஜோசப் ஆல்பர்ஸ்
36. எனக்கு ஒரு
மீன் கொடுத்தால் நான் ஒரு நாள் சாப்பிடுவேன். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்,
நான் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவேன். - சீன பழமொழி
37. பள்ளிக்கும்
வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்? பள்ளியில், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டு பின்னர் ஒரு சோதனை
கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில், உங்களுக்கு ஒரு பாடம்
கற்பிக்கும் போது ஒரு சோதனை கொடுக்கப்பட்டுறது - டாம் போடெட்
38. சாதாரண
ஆசிரியர் கூறுகிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர்
நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்கமளிக்கிறார். - வில்லியம் ஆர்தர் வார்டு.
39. நான்
உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என்
ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன்
அலெக்சலாண்டர்
40. யாரிடம்
கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர்
ஆகார். - கதே
41. சிறந்த
ஆசிரியர்கள் இதயத்திலிருந்து கற்பிக்கிறார்கள், புத்தகத்திலிருந்து
அல்ல. - யாரோ
42. இயற்கைதான்
மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைஸ்
43. நல்ல
ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும் - டாக்டா் எஸ் .இராதாகிருஷ்ணன்.
44. கற்பித்தலின்
மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு-ஸ்டீபன் கோவே.
45. சராசரி
ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு
கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். - வில்லியம்
ஆல்பர்ட்
46. ஆசிரியர்
என்பவர் கடினமான விசயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர் - எமர்சன்
47. அனுபவம்
எல்லாவற்றுக்கும் ஆசிரியர் - ஜீலியஸ் சீசர்
48. இரண்டு
வகையான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதிகமாகக் கற்பிப்பவர்கள் மற்றும்
கற்பிக்காதவர்கள் - சாமுவேல் பட்லர்
49. ஆசிரியர்கள் கட்டளையிடாமல்
வழிகாட்ட வேண்டும், ஆதிக்கம் செலுத்தாமல் பங்கேற்க வேண்டும்.
- சிபி நெப்லெட்
50. நிறைய
ஆசிரியர்கள் ஒரு மாணவருக்கு என்ன தெரியாது என்று கண்டறிகிற கேள்விகளாகவே கேட்டு
நேரத்தை வீணடிக்கின்றனர். உண்மையான கேள்வி கேட்கும் கலை ஒரு மாணவனுக்கு என்ன
தெரியும் அல்லது என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதிலேயே இருக்கிறது
(ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
திங்கள், 9 ஆகஸ்ட், 2021
வள்ளுவர் வழியில் பாரதி
சொல்வதுண்டு. அத்தகு திருவள்ளுவர் மீது பாரதிக்குத் தாக்கம்
ஏற்பட்டதில் வியப்பில்லை.
"கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை
மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள் "
என்று திருக்குறளின் பெருமை பேசுவோம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே என
தமிழரின் சிந்தனை மரபைப் போற்றியவர் பாரதி.