செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.- 411
செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச் செல்வமே
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.- 414
ஊன்றுகோல் போல துன்பத்தில், உதவுவது கேள்வியறிவே
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.- 416
எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது விளையும்
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.- 418
செவியின் கேட்புத்திறன், ஓசையல்ல, கேள்வியறிவே!
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராதல் அரிது.- 419
நல்ல கேள்வியறிவுடைரே, பணிவுடன் பேசுவா்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - 420
செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?
ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துகொண்ட நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.
பெருந்தொற்றின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெறாவிட்டாலும் இணையவழி சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெறுவது வரவேற்புக்குரியது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு ஸ்டாலின் குணசேகரன் ஐயா அவர்களுக்கும் அமைப்பின் செயல் வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக