வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 24 மே, 2021

வாழ்க்கை பற்றிய 40 பொன்மொழிகள்


 

1. அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.

 

2. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.

-அரிஸ்டாட்டில்          

 

3. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை, தீமை

என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

 

4. பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்

 

5. நூலகம் என்பது ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்

 

6. நேரத்தை வீணாக்காதே அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்

 

7. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!                                       - பெர்னார்ட்ஷா

 

8. வாழ்வில் வெற்றிபெற நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ

 

9. நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் - ஹார்லி டேவிட்சன்

10. வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்

- மகாவீரர் 

 

11. என் வாழ்க்கையை என்னால் மாற்ற முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது - காரல் பர்நெட்

 

12. வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல, உங்களை உருவாக்கிக்கொள்வது. -ஜார்ஜ் பெர்னாட்சா

 

13. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான் உண்மையான அறிவாளி. - லின்யுடங்

 

14. வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை -ரிச்சர்ட் சாண்டர்ஸ் 

15. முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம். - கோல்டன்

 

16. நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.  -நியேட்சே.  

 

17. வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம். - பிராய்டு.    

 

18. வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்.  

 

19. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.          

 

20. ஆராயப்படாத வாழ்க்கை பயனற்றது. - சாக்ரடீஸ்    

 

21. வாழ்க்கையில் வெற்றிக்கான ரகசியம்,

ஒரு மனிதன் வாய்ப்புக்காகத் தயாராக இருக்க வேண்டும்

- பெஞ்சமின் டிஸ்ரேலி

 

22. வாழ்க்கை என்பது ஒரு கேள்வி, நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில். - கேரி கெல்லர்

 

23. எனது வாழ்க்கையே எனது செய்தி. - மகாத்மா காந்தி

24. வாழ்க்கை என்பது படிப்பினைகளின் தொடர்ச்சியாகும், இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். - ரால்ப் வால்டோ எமர்சன்

 

25. நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் மனசாட்சி: இதுதான் சிறந்த வாழ்க்கை. - மார்க் ட்வைன்

 

26. வாழ்க்கை மிகவும் எளிது, ஆனால் அதை நாம் தான் சிக்கலாக்கிவிடுகிறோம். - கன்பூசியஸ்

 

27. வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை நிலைநிறுத்த, நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

28. ஒவ்வொரு மனிதனும் இறக்கிறான். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் வாழவில்லை. -வில்லியம் வாலாக்

    

29. ஆச்சரியம் என்பது வாழ்க்கை நமக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. - போரிஸ் பாஸ்டெர்னக்

 

30. வாழ்க்கையின் நோக்கம் ஒரு நோக்கத்துடன் வாழ்வதே.

- ராபர்ட் பைர்ன்

 

31. வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல, ஆனால் அனுபவிக்க வேண்டிய ஒரு உண்மை. - சோரன் கீர்கேகார்ட்

 

32. நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதே - தலாய் லாமா

 

33. வாழ்க்கையில் மூன்று மாறிலிகள் உள்ளன ...

மாற்றம், தேர்வு மற்றும் கொள்கைகள். - ஸ்டீபன் கோவி

 

34.  வாழ்க்கை என்பது நீளமாக வாழ்வதல்ல, ஆழமாக வாழ்வது. - ரால்ப் வால்டோ எமர்சன்

 

35. அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதை விட அர்த்தமுள்ள மரணத்தை நான் இறக்க விரும்புகிறேன். கொராஸன் அக்வினோ

 

 

36. வாழ்க்கை என்பது அறிவியல் அல்ல, அது ஒரு கலை.

-சாமுவேல் பட்லர்

 

37. கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல; கல்வி என்பது வாழ்க்கையே. - ஜான் டீவி

38. சாலைகள் மற்றும் தங்கும் வசதிகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணம் வாழ்க்கை.

- ஆலிவர் கோல்ட்ஸ்மித்

 

39. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடுகளாக இருப்பதைவிட ஒரு நாள் சிங்கமாக இருப்பது நல்லது. - எலிசபெத் கென்னி

 

40. தவறான வாழ்க்கையைச் சரியாக வாழ முடியாது.

- தியோடர் டபிள்யூ. அடோர்னோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக