1. அறியாமையுடன் ஒருவன்
நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.
2. வாழ்க்கையில்
முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற
பொறுமையும், தன்னடக்கமும் தேவை.
-அரிஸ்டாட்டில்
3. வாழ்க்கை என்கிற
ஆடையில் நன்மை, தீமை
என்ற இரு நூல்களும்
இருக்கும். - ஷேக்ஸ்பியர்
4. பெரும் அறிவாளிகள்
புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்
5. நூலகம் என்பது
ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்
6. நேரத்தை வீணாக்காதே
அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்
7. வாழ்க்கை அனுபவமில்லாத
எவரும் கல்வி கற்றவராக முடியாது! -
பெர்னார்ட்ஷா
8. வாழ்வில் வெற்றிபெற
நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ
9. நீங்கள் தான் உங்கள்
வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் -
ஹார்லி டேவிட்சன்
10. வாழ்க்கை ஒரு
போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்
- மகாவீரர்
11. என் வாழ்க்கையை
என்னால் மாற்ற முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது - காரல் பர்நெட்
12. வாழ்க்கை என்பது
உங்களைக் கண்டறிவதல்ல, உங்களை உருவாக்கிக்கொள்வது. -ஜார்ஜ் பெர்னாட்சா
13. புத்தகங்களோடு
வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான் உண்மையான அறிவாளி. - லின்யுடங்
14. வாழ்க்கையை வளமாக்க
விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை -ரிச்சர்ட்
சாண்டர்ஸ்
15. முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை,
அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம். - கோல்டன்
16.
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து
போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -நியேட்சே.
17. வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம்
திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம். - பிராய்டு.
18. வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின்
பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.
19. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால்
வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.
20. ஆராயப்படாத வாழ்க்கை பயனற்றது. - சாக்ரடீஸ்
21.
வாழ்க்கையில் வெற்றிக்கான ரகசியம்,
“ஒரு மனிதன் வாய்ப்புக்காகத் தயாராக இருக்க வேண்டும்”
- பெஞ்சமின் டிஸ்ரேலி
22. வாழ்க்கை என்பது ஒரு கேள்வி,
நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில். - கேரி கெல்லர்
23.
எனது வாழ்க்கையே எனது செய்தி. - மகாத்மா காந்தி
24.
வாழ்க்கை என்பது படிப்பினைகளின் தொடர்ச்சியாகும்,
இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். - ரால்ப் வால்டோ எமர்சன்
25.
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் மனசாட்சி: இதுதான் சிறந்த
வாழ்க்கை. - மார்க் ட்வைன்
26.
வாழ்க்கை மிகவும் எளிது, ஆனால் அதை நாம் தான் சிக்கலாக்கிவிடுகிறோம். - கன்பூசியஸ்
27. வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது.
உங்கள் சமநிலையை நிலைநிறுத்த, நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
28.
ஒவ்வொரு மனிதனும் இறக்கிறான். ஒவ்வொரு மனிதனும் உண்மையில்
வாழவில்லை. -வில்லியம் வாலாக்
29. ஆச்சரியம் என்பது வாழ்க்கை நமக்கு
வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. - போரிஸ் பாஸ்டெர்னக்
30. வாழ்க்கையின் நோக்கம் ஒரு நோக்கத்துடன் வாழ்வதே.
- ராபர்ட் பைர்ன்
31. வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல,
ஆனால் அனுபவிக்க வேண்டிய ஒரு உண்மை. - சோரன் கீர்கேகார்ட்
32.
நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதே -
தலாய் லாமா
33.
வாழ்க்கையில் மூன்று மாறிலிகள் உள்ளன ...
மாற்றம், தேர்வு
மற்றும் கொள்கைகள். - ஸ்டீபன்
கோவி
34.
வாழ்க்கை என்பது
நீளமாக வாழ்வதல்ல, ஆழமாக வாழ்வது. - ரால்ப் வால்டோ எமர்சன்
35. அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதை விட அர்த்தமுள்ள மரணத்தை நான் இறக்க விரும்புகிறேன். கொராஸன் அக்வினோ
36.
வாழ்க்கை என்பது அறிவியல் அல்ல,
அது ஒரு கலை.
-சாமுவேல் பட்லர்
37.
கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல;
கல்வி என்பது வாழ்க்கையே. - ஜான் டீவி
38. சாலைகள் மற்றும் தங்கும் வசதிகள் எவ்வளவு
மோசமாக இருந்தாலும் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணம் வாழ்க்கை.
- ஆலிவர் கோல்ட்ஸ்மித்
39. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடுகளாக இருப்பதைவிட ஒரு
நாள் சிங்கமாக இருப்பது நல்லது. - எலிசபெத் கென்னி
40. தவறான வாழ்க்கையைச் சரியாக வாழ முடியாது.
- தியோடர் டபிள்யூ. அடோர்னோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக