1. அறியாமையுடன் ஒருவன்
நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.
2. வாழ்க்கையில்
முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற
பொறுமையும், தன்னடக்கமும் தேவை.
-அரிஸ்டாட்டில்
3. வாழ்க்கை என்கிற
ஆடையில் நன்மை, தீமை
என்ற இரு நூல்களும்
இருக்கும். - ஷேக்ஸ்பியர்
4. பெரும் அறிவாளிகள்
புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்
5. நூலகம் என்பது
ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்
6. நேரத்தை வீணாக்காதே
அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்
7. வாழ்க்கை அனுபவமில்லாத
எவரும் கல்வி கற்றவராக முடியாது! -
பெர்னார்ட்ஷா
8. வாழ்வில் வெற்றிபெற
நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ
9. நீங்கள் தான் உங்கள்
வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் -
ஹார்லி டேவிட்சன்
10. வாழ்க்கை ஒரு
போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்
- மகாவீரர்