இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு. - 1321
தவறின்றியும், தவறு காணுதல் அவா் அன்பை பெறும் வழியன்றோ
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். - 1322
ஊடலால் வரும் சிறுதுன்பத்தால், அன்பு குறையினும் பெருமை பெறும்
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. - 1323
நிலத்துடன் நீர் சேர்ந்தது போன்றவருடன்
ஊடுதலைவிட பேரின்பம் ஏது
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.- 1324
கூடலுக்குக் காரணமான ஊடல் தான், என் மனவுறுதியை அழிக்கிறது
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. - 1325
தவறின்றியும் அவள்மீது சிறுகோபம் கொண்டு
நீங்கியிருத்தலும் சுகமே
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. -1326
உண்பதைவிட செரித்தல் இனிது, கூடுவதைவிட ஊடுவது இனிது
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். - 1327
ஊடலில் தோற்றவரே வென்றார், அது கூடுதலில் வெளிப்படும்
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. -1328
கூடிப் பெறும் இன்பத்தை, இவளை ஒருமுறை ஊடிப் பின் பெறுவோமா
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. - 1329
அவள் ஊடியே இருக்கட்டும், அவளை வேண்டியே இவ்விரவு நீளட்டும்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். - 1330
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக