அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது? - 1291
என் நெஞ்சே உன்னை நினைக்காதவரையே நீ நினைப்பது
ஏன்?
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. -1292
அன்பில்லாதவரைக் கண்டும் ஏன் அவரிடம்
செல்கிறாய் நெஞ்சே!
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்?
- 1293
கெட்டோருக்கு நட்பில்லை என்பதாலோ, நெஞ்சே அவா்பின் சென்றாய்
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. - 1294
நெஞ்சே! ஊடலால் விளையும் கூடலை அறியாத
உன்னிடம் பேசேன்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. - 1295
அவரைக் காணாத போதும் அச்சம்!, கண்டாலும் பிரிவெண்ணி அச்சம்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. - 1296
தனிமையில் பிரிவு பற்றி நினைத்தால் என்
நெஞ்சம் மேலும் வருத்தும்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. - 1297
அவரை மறக்கமுடியாததால், மறக்கக்கூடாத நாணத்தை மறந்தேன்
எள்ளின் இனிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. - 1298
பிரிந்தாலும் அவரை இகழ்வது இழிவென்பதால்
புகழ்கிறது என் நெஞ்சு
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. - 1299
துன்பத்தில் நெஞ்சமும் துணைவராவிட்டால்
யார் துணை வருவார்!
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. - 1300
நம் நெஞ்சமே எதிர்க்கும் போது, அயலார் எதிர்ப்பது இயல்பே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக