கரப்பினுங் கையிகந் தொல்லாதின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. -1271
சொல்ல மறைத்தாலும் மையுண்ட உன்கண்கள்
காட்டிவிடும்
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. - 1272
அழகிய இப்பெண்ணிற்கு பெண்மைத்தன்மை நிறைந்து
விளங்குகிறது
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. -1273
மாலையுள் நூலைப்போல, இவளின் அழகில் மயக்கும் குறிப்புள்ளது
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. -1274
அரும்பில் நிறைந்த மணம்போல, அவள் சிரிப்பில் அவன் நினைவுள்ளது
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. -1275
வளையணிந்த என்னவளின் பார்வையில் துயா்தீர்க்கும்
மருந்துள்ளது
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.- 1276
ஆரத்தழுவி, அன்புகாட்டும் அவரியல்பு பிரிவையே உணர்த்துகிறது
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. -1277
அவர் பிரிவை என்னைவிட என் வளையல்களே முன்
உணர்கின்றன
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.- 1278
ஒருநாள் பிரிந்தாலும் ஏழுநாள் பசலை தோன்றுகிறது
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. -1279
தன் பசலைகாட்டி அழைத்துச் செல் என்று
குறிப்பால் உணர்த்துகிறாள்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.-1280
கண்களாலே காதல் சொல்லிப் பெண்மைக்குப்
பெருமை சேர்க்கிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக