வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். - 1261
அவரின் வழிபார்த்தே கண்களும், நாட்குறித்தே விரல்களும் தேய்ந்தன
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. -1262
தோழி பிரிவால் வாடும் நான், அவரை மறந்தால் மேலும்
மெலிவேன்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். - 1263
ஊக்கமுடன் போருக்குச் சென்றவரை, எதிர்பார்த்தே இன்னும் உள்ளேன்
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொடு ஏறுமென் நெஞ்சு. - 1264
என்னுள் கலந்தவா் வருகையை, மரங்களின் உச்சியில் தேடும் நெஞ்சம்
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. - 1265
காதலரைக் கண்ணாரக் கண்டால் என் பசலை நோய்
நீங்கும்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.- 1266
ஒருநாள் வருவார் காதலர், அப்போது துன்பம் தீர இன்பம் துய்ப்பேன்
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரன்? - 1267
என்னவரைக் கண்டால் ஊடுவேனோ! தழுவுவேனோ!
கூடுவேனோ
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. - 1268
வெற்றியுடன் வரும்நாளில், மனைவியுடன் விருந்துண்டு மகிழ்வோம்
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - 1269
பிரிந்தவளுக்கு ஒருநாள்கூட ஏழுநாள் போலச்
செல்லும்
பெறின்என்றாம் பெற்றக்கால் என்னாம் உறினென்றாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். -1270
பிரிவால் மனம்வாட பெற்ற வெற்றியால் பயன்
இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக