காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.- 1251
காமம், கோடரியாக மாறி, நாணத்தாழிட்ட மனஅடக்கத்தை வீழ்த்தும்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். - 1252
இரக்கமற்ற காமம் நள்ளிரவிலும் என்னை ஆள்கிறது
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். - 1253
தும்மலைப் போன்றது இக்காதல் எப்படி மறைத்தாலும்
வெளிப்படும்
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். - 1254
அடங்கியிருந்த காமம், தற்போது அடங்கமறுத்துத் பொதுவில்தோன்றும்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. - 1255
பிரிந்த காதலர்பின் செல்லாத தன்மானம்
காதலுற்றவா்களுக்கு இல்லை
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். - 1256
விரும்பாதவா் பின் செல்வதால் காமம்நோய்
கொடியது
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். - 1257
காமத்தால் நாணத்தை மறக்கிறேன்
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. - 1258
பலமாயம் செய்யும், காதலரின் அன்புமொழியே பெண்மையை அழிக்கும்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.-1259
சண்டையிடச் சென்றவள், நெஞ்சம் அவருடன் கலந்ததால் தழுவினேன்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.- 1260
கொழுப்பை தீயிலிட்டாரன்ன நெஞ்சுடையார்
கூடி பின் ஊட முடியுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக