சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். - 1231
பிரிந்து சென்ற காதலரை எண்ணி வருந்திய
என் கண்கள் அழகிழந்தன
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். - 1232
காதலரின் அன்பின்மையை, என் பசலையும், அழும் கண்களும் கூறும்
தணந்தாமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். - 1233
அவரைக் கூடிப்பருத்த தோள்கள், பிரிவால் வாடி, துயரின் சாட்சியாகும்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். - 1234
பிரிவால், தோள்கள் வாடி, வளையல்கள் கழன்று விழும்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். - 1235
காதலரின் கொடுமையை என் தோள் நலிவைப் பார்த்தே
அறியலாம்
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.-1236
பசலையைவிடக் கொடியது காதலர் கொடியவர்
என்ற சொல்லே
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.- 1237
நெஞ்சே என் தோள்மெலிவை அவரிடம் கூறிப்
பெருமைப்படுவாயோ
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். - 1238
தழுவலைத் தளர்த்தியதும் பேதை நெற்றியில்
படர்ந்தது பசலை
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். - 1239
தழுவலுக்கிடையே காற்று புகினும், பசலை கொள்கிறாள் இப்பேதை
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. - 1230
பிரிவால் வாடிய நெற்றியைக் கண்டு, கண்களும் பசலையடைந்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக