மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. - 1221
மாலைக் காலமே நீ பொழுதல்ல! பிரிந்தோர்
உயிரை உண்ணும் வேல்!
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை? -
1222
மயங்கும் மாலையே? உன் துணையும் என் காதலர் போல் கொடியவரோ
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். - 1223
பிரிவில் வாடும் என்னை மேலும் துன்பத்தால்
வாட்டும் இந்த மாலைநேரம்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.-1224
காதலர் இல்லாத போது கொலைக்களத்தில் எதிரிபோல
வரும் மாலை!
காலைக்குச் செய்தநன்றுஎன்கொல்? எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? - 1225
காலைக்கு என்ன நன்மை செய்தேன்? மாலைக்கு என்ன தீங்கிழைத்தேன்?
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். - 1226
மாலை நேரம் கொடியது என்பது,காதலரில்லாத போதே தெரிகிறது!
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். - 1227
காலை அரும்பி, பகலில் பேரரும்பாகி, மாலையில் மலரும் காதல் நோய்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. - 1228
தீ போன்ற மாலைக்கு,ஆயனின் குழலும் கொல்லும் படையாகிவிடும்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. - 1229
என் அறிவை மயக்கும் மாலைப்பொழுது இந்த
ஊரையும் மயக்குமோ!
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். - 1230
பொருளுக்காகப் பிரிந்தவரையே எண்ணி என்
அழியாத உயிர் அழிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக