உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. - 1201
குடித்தால்தான் மகிழ்ச்சிதரும் கள்! நினைத்தாலே
மகிழ்ச்சிதரும் காமம்
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொனறு இல். -1202
பிரிவில் நினைத்தாலும் இனிமை தருவதால்
காமமே இனிது
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். -1203
எமை நினைக்கிறாரா? இல்லையா? தும்பல் வருவது போல் மறைகிறதே
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். - 1204
அவர் இங்கு நலமே! நான் அங்கு நலமா?
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். - 1205
என்னை நினைக்காதவர், என் மனதில் மட்டும் ஓயாது வருவது ஏனோ
மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடு இயான்
உற்றநாள் உள்ள உளேன். - 1206
அவரோடு இருந்த நாளை நினைப்பதால் தான்
வாழ்கிறேன்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.-1207
அவரை மறக்க நினைத்தாலே மனம்வாடும்! நினைக்க
மறந்தால்?
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. - 1208
அவரை எவ்வளவு நினைத்தாலும் அதற்காக கோபப்படமாட்டார்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. - 1209
நாம் இருவரல்ல ஒருவரென்றவர் இன்று மறந்ததால்
வருந்தும் உயிர்
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. - 1210
நீங்காமலிருந்து நீங்கியவரைக் காணும்வரை
நிலவே நீ துணையாயிரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக