நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. - 1181
காதலரின் பிரிவை ஏற்றேன். இப்பசலையை யாரிடம்
கூறுவேன்
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.- 1182
காதலர் தந்தார் என்ற உரிமையுடன் என் உடல்
பரவுகிறது பசலை
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. - 1183
அழகும், நாணமும் கொண்டு அவர், காமமும், பசலையும் தந்தார்
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. -1184
அவரைப்பற்றியே பேசுகிறேன், நினைக்கிறேன், இருந்தும் வந்தது பசலை
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. - 1185
அதோ! காதலர் என்னைப் பிரிகிறார், இதோ! என்மேல் படர்கிறது பசலை
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயற்கற்றம் பாரக்கும் பசப்பு. -1186
விளக்கில்லா இடத்தில் இருள் போல, அவரில்லா இடத்துப்படரும் பசலை
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. -1187
அவரைத் தழுவிப் பிரிந்தேன், உடனே விரைந்து பரவியதே பசலை
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். -1188
பசலை கொண்டாள் என்பார் உண்டு! பசலை தந்தார்
என்பார்
இல்லை பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். -1189
காதலர் நலமுடனிருப்பாரென்றால் இப்பசலை
இப்படியே இருக்கட்டும்
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். -1190
காதலரை ஊரார் திட்டாவிட்டால், பசலையும் மகிழ்ச்சி தருவதுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக