கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண்டது.- 1171
கண்கள் தந்ததே இக்காதல் நோய், அவரைக்கண்டு அழுவதும் கண்ணே
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.- 1172
கண்களால் வருவதே காதல் துயர், இதைக் கண்கள் உணர்வதில்லை
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. - 1173
காதலரைக் கண்டு மகிழ்ந்ததும், காணாமல் அழுவதும் கண்களே
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. - 1174
காம நோய்தந்த கண்கள் தாமும் அழமுடியாமல்
நீர்வற்றி வறண்டன
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். - 1175
கடலினும் பெரிய காமம்தந்த கண்கள் இன்று
தூங்காது வருந்துகின்றன
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற் பட்டது. - 1176
எனக்குக் காமத்துயர்தந்த கண்கள் தூங்காது
வாடுவது எனக்கு மகிழ்வே
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். - 1177
பார்த்துப் பார்த்து மகிழ்ந்த கண்கள்
இன்று தூங்காது வற்றிப்போகட்டும்
பேணாது பெட்டார் உளர்மன்றோ மற்றவர்க்
காணாது அமைவில கண். - 1178
மனதால் விரும்பாதவரை எண்ணி என் கண்கள்
வருந்துகின்றன
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். - 1179
காதலர் வராவிட்டாலும், வந்தாலும் தூக்கமின்றித் தவிப்பன கண்களே
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. - 1180
பறை போன்றன எம் அழும் கண்கள்! அதனால்
பிரிவை ஊரார் அறிவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக