செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. - 1151
செல்லாவிட்டால் என்னிடம் கூறு, பிரிவதென்றால் வாழ்பவரிடம் கூறு
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. - 1152
அவருடன் சேர்ந்திருந்தாலும் பிரிவாரே
என்ற அச்சமே மிகுகிறது
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.- 1153
பிரியேன் என்ற சொல்லை நம்பாதே! அறிவுடையாருக்கும்
பிரிவுண்டு
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. - 1154
பிரியமாட்டேன் என்றவர் பிரிந்தால், நம்பியவர் மேல் என்ன தவறு?
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. - 1155
காதலர் பிரிந்தால் பின்னர் சேருவது கடினம்
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.- 1156
பிரிவைத் தெரிவிக்கும் கல்நெஞ்சமுடையவர்
பின் சேருவது கடினம்
துறைவன் துறந்தமை தூற்றகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. - 1157
தலைவனின் பிரிவை, கழன்றுவிழும் என் முன்கை வளையே காட்டும்
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியாரப் பிரிவு. -1158
உறவினர் பிரிவைவிட, காதலர் பிரிவு கொடுமையானது
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. - 1159
தொட்டால்தான் சுடும் தீ, நீங்கினாலே சுடும் காமம்
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். -1160
பிரிவுத்துயரைப் பொறுத்து வாழ்பவர் பலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக