பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 12 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 112. நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள். -1111

அனிச்ச மலரே உன்னைவிட மென்மையானவள் என் காதலி       

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று. -1112

என் நெஞ்சே! அவள் கண்களைக் கண்டு மலர் என ஏன் மயங்குகிறாய்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.-1113

தளிருடல், முத்துப்பல், இயற்கை மணம், வேல்விழி, மூங்கிற் தோளாள்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.- 1114

இவள் கண்களைக்கண்டு குவளை மலர்களும் ஒவ்வேம் என நாணும்

அனிச்சப்பூக் கால்களையான் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை. - 1115

அனிச்ச மலரின் காம்பைக் கூட தாங்காத மெல்லிடையாள் அவள்   

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன். - 1116

இவள் முகம் எது? நிலவு எது? என அறியாது விண்மீன்கள் மயங்கும்  

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. - 1117

நிலவுக்கும் களங்கம் உண்டு! இவள் முகத்துக்கு ஏதும் இல்லை

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி. - 1118

நிலவே! இவள் முகம்போல ஒளி வீசுவாயானால் யாவரும் விரும்புவர்

மலரன்ன கண்ணான் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி. - 1119

நிலவே! நீ அவள் போலிருக்க விரும்பினால் பலர்காண தோன்றாதே  

அனிச்சமும் அன்னத்தின் தூவியம் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம். - 1120

அனிச்சமும், அன்னத்தின் இறகும் இவளடிக்கு நெருஞ்சிப் பழம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக