பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 11 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 111. புணர்ச்சி மகிழ்தல்

 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள. -1101

ஐம்புலன் இன்பங்களும் வளையணிந்த பெண்களிடமே உள்ளன

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து. -1102

நோய்க்கு மருந்துகள் பல, ஆனால் காதல்நோய்க்கு காதலியே மருந்து

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.-1103

சொர்க்க இன்பம், பெண் இன்பத்தைவிடப் பெரிதா?

நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.-1104

நீங்கினால் சுடும்! சேர்ந்தால் குளிரும்! இத்தீயை எங்கு பெற்றாள் இவள் 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.-1105

விரும்பிய பொருள் தரும் இன்பம்போன்றது, இவளின் தோளின்பம்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.-1106

உயிர் தளிர்ப்ப தழுவுவதால் இவள் தோள்கள் அமிழ்தம் போன்றன     

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு. -1107

உழைத்து ஈட்டிய பொருளை பகுத்துண்பது போன்றதே பெண்ணின்பம்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.- 1108

காற்றும் நுழையாதபடி இறுகித் தழுவுதல் காதலர், இருவர்க்கும் இனிதே

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.-1109

ஊடிய பின் உணர்தல், அதன்பின் கூடுதலே காதலர் பெற்றபயன்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.-1110

அறிய அறிய அறியாமை கூடும்! இவளைக் கூடகூட இன்பம் கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக