கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. -1101
ஐம்புலன் இன்பங்களும் வளையணிந்த பெண்களிடமே
உள்ளன
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. -1102
நோய்க்கு மருந்துகள் பல, ஆனால் காதல்நோய்க்கு காதலியே மருந்து
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.-1103
சொர்க்க இன்பம், பெண் இன்பத்தைவிடப் பெரிதா?
நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.-1104
நீங்கினால் சுடும்! சேர்ந்தால் குளிரும்!
இத்தீயை எங்கு பெற்றாள் இவள்
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.-1105
விரும்பிய பொருள் தரும் இன்பம்போன்றது, இவளின் தோளின்பம்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.-1106
உயிர் தளிர்ப்ப தழுவுவதால் இவள் தோள்கள்
அமிழ்தம் போன்றன
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. -1107
உழைத்து ஈட்டிய பொருளை பகுத்துண்பது போன்றதே
பெண்ணின்பம்
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.- 1108
காற்றும் நுழையாதபடி இறுகித் தழுவுதல்
காதலர், இருவர்க்கும் இனிதே
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.-1109
ஊடிய பின் உணர்தல், அதன்பின் கூடுதலே காதலர் பெற்றபயன்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.-1110
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக