பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 10 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 110. குறிப்பறிதல்

 


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. - 1091

இவளது ஒருநோக்கு நோய்செய்யும், மறுநோக்கு மருந்தாகும்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது. -1092

நானறியாது என்னைக்காணும் அவள் பார்வை இன்பத்தில் மிகப்பெரிது

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.-1093

இவளின் கடைக்கண்பார்வை எம் அன்புக்கு அவள் ஊற்றிய நீர்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.-1094

பார்த்தால் நிலத்தைப் பார்ப்பாள், பார்க்காவிட்டால் பார்த்து மகிழ்வாள்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.- 1095

என்னை நேரே காணவில்லை, கடைக்கண்ணாலே கண்டு மகிழ்கிறாள்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.-1096

அயலார்போல பேசினாலும் அன்புடையார் சொல்லை உணரலாம்     

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.-1097

கடுஞ்சொல், எதிரிபோன்ற தோற்றத்தில் உள்ளன்பே காதல் குறிப்புகள் 

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.- 1098

நான் பார்க்கும்போது அவள் மெல்லச் சிரிப்பதில் அழகுள்ளது 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.-1099

தொடர்பில்லாதவர் போல பார்த்தல் காதலர்களுக்கு உள்ள இயல்பு   

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்

என்ன பயனும் இல. -1100

கண்களிரண்டும் பேசும்போது, வார்த்தைகளால் எந்தப் பயனுமில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக