பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 9 டிசம்பர், 2020

திருக்குறள் - 109. அதிகாரம் - தகையணங்குறுதல்

 


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. -1081

நோக்கினால் என் மனம் மயங்குகிறது தெய்வமகளா? மயிலா? பெண்ணா? 

நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து. - 1082

அவள் பார்வையே அணங்கு பெரும்படை கொண்டு தாக்குதல் போன்றது

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையான் பேரமர்க் கட்டு. - 1083

இளம்பெண்ணின் பார்வையே எமனைப் போன்றது    

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண். - 1084

இளம்பெண்ணின் பார்வையே கொல்லும் அளவு கொடியது

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து. - 1085

இளம்பெண்ணின் பார்வை எமனோ, கண்ணோ மானோ என மயக்கும்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.-1086

இவளின் வளைந்த புருவம் நேராக இருந்தால், கண்களால் துன்பமில்லை

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில். - 1087

பெண்ணின் மேலாடை, யானையின் முகபடாம் போன்றது

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு. - 1088

எதிரிகளும் அஞ்சும் என்வலிமை, இவளது நெற்றியழகிற்கே மயங்கும்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ எதில தந்து. -1089

நாணமும், மானுருவமும் உடையவளுக்கு வேறென்ன அணிவேண்டும்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று. -1090

உண்டால்தான் மயக்கம் தரும் கள், கண்டாலே மயக்கும் காமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக