பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 8 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 108. கயமை

 


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில். - 1071

கயவருக்கென தனிஉருவமில்லை! மனிதரைப் போன்றதே அந்தஉருவம்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர். -1072

கவலை இல்லாமையால்,நல்லோரைவிட கயவர்களே மகிழ்வானவர்கள்

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். - 1073

தாம் விரும்பியபடி வாழ்வதால் கயவரும் தேவர் போன்றவர்

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். - 1074

தம்மைவிட கீழானவரைக்கண்டு தாம் சிறந்தோர் என நினைப்பர் கயவர்

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது. - 1075

தண்டனைக்கும், புகழுக்காகவும் மட்டுமே கயவர் ஒழுங்காக இருப்பார்

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். - 1076

இரகசியங்களை பிறரிடம் சொல்வதால் கயவர், பறைபோன்றவர்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.-1077

கயவர் தம்மை அடிப்பவரைத்தவிர பிறருக்கு எவ்வுதவியும் செய்யார்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ். - 1078

கரும்பு போல அழிந்தே பயன்படுவர் கயவர். நல்லோருக்கு ஒரேசொல்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.- 1079

பிறர் உண்பதையும், உடுப்பதையும் பார்த்தே பொறாமைப்படுவர் கயவர்

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து. - 1080

கயவரின் தகுதி தெரியுமா? துன்பத்தில் தன்னையே விற்பதே அவர் தகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக