மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். - 1071
கயவருக்கென தனிஉருவமில்லை! மனிதரைப் போன்றதே
அந்தஉருவம்
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். -1072
கவலை இல்லாமையால்,நல்லோரைவிட கயவர்களே மகிழ்வானவர்கள்
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். - 1073
தாம் விரும்பியபடி வாழ்வதால் கயவரும்
தேவர் போன்றவர்
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். - 1074
தம்மைவிட கீழானவரைக்கண்டு தாம் சிறந்தோர்
என நினைப்பர் கயவர்
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. - 1075
தண்டனைக்கும், புகழுக்காகவும் மட்டுமே கயவர் ஒழுங்காக இருப்பார்
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். - 1076
இரகசியங்களை பிறரிடம் சொல்வதால் கயவர், பறைபோன்றவர்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.-1077
கயவர் தம்மை அடிப்பவரைத்தவிர பிறருக்கு
எவ்வுதவியும் செய்யார்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். - 1078
கரும்பு போல அழிந்தே பயன்படுவர் கயவர்.
நல்லோருக்கு ஒரேசொல்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.- 1079
பிறர் உண்பதையும், உடுப்பதையும் பார்த்தே பொறாமைப்படுவர் கயவர்
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. - 1080
கயவரின் தகுதி தெரியுமா? துன்பத்தில் தன்னையே விற்பதே அவர் தகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக