பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 5 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 106 இரவு

 


இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று. -1051

வள்ளல்களிடம் கேட்பது பழியில்லை, இல்லை என்பதே அவருக்குப் பழி

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின். -1052.

வழங்குபவர் மகிழ்ந்து தந்தால் பெறுபவர்க்கு, பிச்சைகூட இன்பமாகும்

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ஏஎர் உடைத்து.-1053

திறந்த மனதும், கடமையுமறிந்தவரிடம் பிச்சை கேட்பதுகூட அழகாகும்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.-1054

கனவிலும் மறைத்தறியாதவரிடம் பிச்சை பெறுவதும் ஈகை போன்றதே

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.-1055

வழங்கும் பண்புடையவர்களால்தான் இரப்போர் வாழ்கின்றனர்

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.-1056

பொருளை மறைக்காத வள்ளல்களைக் கண்டால் வறுமை மறையும்

இகழ்ந்தௌfளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.- 1057

இகழாமல் வழங்குவோரைக் கண்டால் உள்ளம் மகிழ்வதே இயல்பு

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாரை சென்றுவந் தற்று.-1058

இரந்து வாழ்வோர் இல்லாவிட்டால் மரப்பாவை போன்றது உலகம்

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.-1059

பெறுபவரால்தான் வழங்குபவர் புகழ் பெறுகிறார்

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.-1060

வறுமையின் நிலை உணர்ந்து கேட்பவன் கோபப்படக்கூடாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக