வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை. - 1031

பல தொழில்களில் இயங்கினாலும் ஏரின் பின்னதே  இவ்வுலகம்    

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து. -1032

உழவுத் தொழிலே உலகிற்கு அச்சாணி போன்றது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.-1033

உழுபவரே வாழ்வபர் பிறர் அவர் பின் வணங்கிச் செல்பவர்

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.-1034

உழவரே பல நாடுகளையும் ஆள்பவர் போன்றவர்

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.-1035

உழவர் கொடுப்பாரே தவிர கையேந்தமாட்டார்கள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.-1036

உழவர்களாலேதான் துறவிகளும் வாழ்கின்றனர்

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.- 1037

நன்கு உழுது காயவைத்தால் எருவும் தேவையில்லை

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.-1038

உழுவதைவிட, உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், காத்தல் நன்று

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.- 1039

நிலத்தை கவனிக்காவிட்டால்,மனைவியைப் போல கோபம் கொள்ளும்

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.- 1040

இல்லை என்று உழைக்காது இருப்பவரைக் கண்டு நிலம் சிரிக்கும்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக