பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டும் சில செய்திகளை விரித்துப் பேசும் தொழில்நுட்ப நூல் மரபுகள் தமிழில் ஆங்காங்கே அறுந்து கிடக்கின்றன என்பது உண்மை. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு மாற்றுப் பார்வை தேவைப்படுகிறது என்று தெரிகிறது.
“முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம்“ என்று தலைப்பிடப் பெற்றுள்ள இச்சிறு கையேடு ஓர் ஆய்வுத் துப்பு.அரச வேலி - பாண்டு கம்பளம் என்று பெயரிடப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய தரவு - தேடல் முயற்சியின் கிளையாகவும், மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தாரின் தமிழ்புத்தாண்டு புரிதல் முயற்சியின் கிளைப் பயனாகவும் தட்டுப்பட்ட சான்றுகளின் தொகுப்பு இவையாகும்.
இவற்றைப் பலதரப்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் பல நிலைகளில் ஆய்வு செய்து செம்மைப்படுத்தித் தமிழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பது எமது விழைவு.
(தென்னன் மெய்ம்மன்)
மின்னூல் பதிவிறக்க முகவரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக