கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. - 981
நற்குணமுடையோர் கடமை இதுவென அறிந்து ஆற்றுவர்
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்தும் உள்ளதூஉம் அன்று. - 982
பிற நலன்களைவிட குணநலமே சான்றோரின் அடையாமாகும்
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் பூன்றிய தூண். - 983
அன்பு, நாணம், ஒற்றுமை, தனிநோக்கு, உண்மை சான்றோரியல்புகள்
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.- 984
கொல்லாமை, பிறர் குற்றங்களைக் கூறாமை சான்றோர் இயல்வு
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.- 985
பணிவால் மாறுபட்டவர்களையும் வெல்லும்
இயல்பினரே சான்றோர்
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். - 986
சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே
மேன்மையின் உரைகல்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. - 987
தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வதே
சான்றாண்மை எனப்படும்
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின். - 988
சால்பு என்ற மனம் பக்குவப்பட்டவருக்கு
வறுமை இழிவானதல்ல
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். - 989
உலகு மாறினாலும் மாறாத இயல்புடையோர் சான்றாண்மைக்
கடலாவர்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்றோ பொறை. - 990
சான்றோர் தன் நிலை மாறினால் இந்த நிலம்
தாங்காது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக