ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். - 971
புகழுடன் வாழ்வதே சிறப்பு, இகழுடன் வாழ்வது இழிவு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - 972
எவ்வுயிர்க்கும் பிறப்பு பொதுவானது, செயலே பெருமை தருகிறது
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். - 973
மேலானவர், கீழானவர் என்பது பண்பாலேயே மதிப்பிடப்படுகிறது
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழிகின் உண்டு. - 974
கற்புடைய மகளிரைப்போல சிறப்பை, ஒழுக்கத்தால் ஒருவனடைவான்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். - 975
அரிய செயல்களை உரியமுறையில் செய்பவரே
பெருமையுடையவர்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. - 976
பெரியோரைப் போற்றி ஏற்கும் பண்பு சிறியோர்க்கு
வாய்ப்பதில்லை
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்.
சீரல் லவர்கண் படின். -977
செல்வமும், பதவியும் பண்பில்லாதவரிடம்
மதிப்பிழந்து போகிறது
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. -978
பணிவதே பெருமை, தற்பெருமை கொள்வதே சிறுமையின் அடையாளம்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். - 979
தற்பெருமையின்மையே பெருமை, தற்பெருமைகொள்வது சிறுமை
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். - 980
பெரியோர் சிறப்பையும், சிறியோர் குறையையும் காண்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக