இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். - 961
மானத்திற்கு இழுக்கானதை எந்நிலையிலும்
செய்யற்க
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். - 962
புகழுக்காக மானத்தை விடாதவரே, புகழுடன் வாழ்வர்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. - 963
உயர்வில் பணிவும், வறுமையில் உயர்வும் வேண்டும்
தலையின் இழிந்த மயிரினையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. - 964
தன் நிலையில் தாழ்ந்தவர், உதிர்ந்த தலைமுடிக்கு சமமானவர்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். -965
மலைபோன்றவரும் சிறுதவறினால் தன்னிலை குன்றிவிடுவர்
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. - 966
இகழ்வாரின் பின்சென்றால் புகழும், நல்வாழ்வும் கிடைக்காகது
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. - 967
தன்னை மதியாதவரின் பின்சென்று வாழ்வதின்
அழிவதே மேல்
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. - 968
மானம் அழிந்தபின் உடலைப் போற்றி வாழாதே
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். - 969
முடிஉதிர்ந்தால் மானும், மானம் இழந்தால் நல்லோரும் உயிர் நீ்ப்பர்
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. - 970
அவமானத்தால் இறந்தாரை உலகம் வணங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக