இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. - 951
நேர்மையும், நாணமும் நற்குடியில் பிறந்தவரிடம் மட்டுமே இருக்கும்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். - 952
ஒழுக்கம், வாய்மை, நாணம் மூன்றும் நற்குடியில் பிறந்தார்க்கே உரியது
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. - 953
புன்னகை, கொடை, இனியசொல், இகழாமை நற்குடியாளர் இயல்புகள்
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். - 954
பணத்துக்காக நற்குடும்பத்தில் பிறந்தவர்
இழிவான செயல் செய்யார்
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. - 955
வறுமை நிலையிலும் நற்குடும்பத்தில் பிறந்தோர்
வழங்குவர்
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார். - 956
வறுமையுற்றாலும் நற்குடியில் பிறந்தோர்
வஞ்சகம் செய்யார்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.- 957
நற்குடும்பத்தினார் குற்றம் நிலவின் களங்கம்போல
பெரிதாகத் தெரியும்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.- 958
நல்லவானயினும் குற்றம் செய்தால் அவன்
குடிப்பிறப்பை ஆய்க
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். - 959
விளைந்த பயிர் நிலத்தையும், பேசிய வார்த்தை குலத்தையும் காட்டும்
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. - 960
பணிவும், நாணமுமே குலப்பெருமையைக் காட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக