வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. - 931
தூண்டிலில் சிக்கிய மீன்போல சூது என்றும்
துன்பமே தரும்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.- 932
பொருள் ஒன்றினைப் பெற்று நூறினை இழப்பா்
சூதாடிகள்
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். - 933
தொடர்ந்து சூதாடும் ஒருவனது பொருட்செல்வம்
அவனை நீங்கும்
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இல். - 934
சிறுமை பல தந்து, சீரழித்து வறுமை தருவதே சூது
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். - 935
பேராசையுடன் சூதாடி வருமையானவர் பலர்
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். - 936
சூதின் வசப்பட்டவர் வறுமையிலும், துன்பத்திலும் வருந்துவர்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். - 937
சூதாடிகள் தம் செல்வத்தையும், பண்பையும் இழந்துவிடுவர்
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளிஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. - 938
பொருள்,உண்மை,அருள், இன்பம் ஆகியன கெடுப்பது சூதே
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். - 939
ஆடை, செல்வம்,உடல்,புகழ், கல்வி என ஐந்தும் அழிப்பது சூது
இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுஉம் காதற்று உயிர்.- 940
துன்பத்தின் பின்பும் உயிர்மேல் கொள்ளும்
ஆசைபோன்றது சூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக