பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 18 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 92. வரைவின் மகளிர்

 


அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும். -911

அன்பின்றி பொருளையே  விரும்பும் மகளிரின் சொல் துன்பம்தரும்  

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.- 912

பணத்திற்காகவே பழகும் இயல்புடைய உறவைத் தவிர்க்க

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று. - 913

பொதுமகளிரின் பொய்யான தழுவல், பிணத்தை தழுவுதல் போன்றது 

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர். - 914

விலைமகளிரின் இன்பத்தை இழிவெனக் கருதுவார் அறிவுடையார்   

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.- 915

நல்லறிவுடையோர் பொதுமகளிரிடம் செல்ல மாட்டார்கள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள். - 916

புகழ்ச்சிக்குரிய சான்றோர், இகழ்ச்சிக்குரிய விலைமகளிரை விரும்பார்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள். - 917

மனக்கட்டுப்பாடு இல்லாதவரே விலைமகளிரைத் தேடிச் செல்வர்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு. - 918

வஞ்சனையை அறியும் அறிவற்றவர்களே பொதுமகளிரைத் தழுவுவர் 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு. - 919

விலைமகளை விரும்பி செல்வதற்கும் நரகத்துக்கும் வேறுபாடில்லை 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.- 920

இருமனமுடைய விலைமகளிர், கள், சூது ஆகியன தீயோர் வழி       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக