பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 17 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 91. பெண்வழிச் சேரல்

 


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது. - 901

பெருமையும், பொருளும் மனைவியை விரும்பினால் மட்டும் வராது 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும். - 902

கடமையை எண்ணாமல் பெண்ணாசை கொள்பவன் இழிவடைவான்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும். - 903

மனைவியைத் தாழ்பவன் நல்லார் முன் அவமானப்படுவான் 

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.- 904

மனைவிக்கு அஞ்சுபவன் சிறந்த செயல்களைச் செய்யமுடியாது 

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல். - 905

மனைவிக்கு அஞ்சுபவன் நற்செயல்கள் செய்வதற்கும் அஞ்சுவான்      

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர். - 906

தேவர்போல வாழ்ந்தாலும் மனைவிக்கு அஞ்சுபவருக்கு பெருமையில்லை

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து. - 907

பெண்ணுக்கு அஞ்சும் ஆண்மையைவிட, நாணும் பெண்மையே சிறந்தது

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர். - 908

நட்பும், உதவும் பண்பும் புகழும் பெண்ணிடம் பணிந்தவர்கில்லை      

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல். - 909

அறமும் பொருளுமின்றியே பெண்ணிடம் பணிபவன் வாழ்வான்       

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல். - 910

சிந்திக்கும் திறனுடையோர் மனைவின் சொல்லை மட்டும் கேளார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக