மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. - 901
பெருமையும், பொருளும் மனைவியை விரும்பினால் மட்டும் வராது
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். - 902
கடமையை எண்ணாமல் பெண்ணாசை கொள்பவன் இழிவடைவான்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். - 903
மனைவியைத் தாழ்பவன் நல்லார் முன் அவமானப்படுவான்
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.- 904
மனைவிக்கு அஞ்சுபவன் சிறந்த செயல்களைச்
செய்யமுடியாது
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். - 905
மனைவிக்கு அஞ்சுபவன் நற்செயல்கள் செய்வதற்கும்
அஞ்சுவான்
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். - 906
தேவர்போல வாழ்ந்தாலும் மனைவிக்கு அஞ்சுபவருக்கு
பெருமையில்லை
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. - 907
பெண்ணுக்கு அஞ்சும் ஆண்மையைவிட, நாணும் பெண்மையே சிறந்தது
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். - 908
நட்பும், உதவும் பண்பும் புகழும் பெண்ணிடம் பணிந்தவர்கில்லை
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். - 909
அறமும் பொருளுமின்றியே பெண்ணிடம் பணிபவன்
வாழ்வான்
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். - 910
சிந்திக்கும் திறனுடையோர் மனைவின் சொல்லை
மட்டும் கேளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக