ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. -891
பெரியோர் செயலை இகழாதிருத்தலே நம்மைக்
காக்கும் சிறந்த காவல்
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். - 892
அறிவிற் பெரியாரை மதிக்காவிட்டால், அச்செயல் பெருந்துன்பம் தரும்
கெடல்வேண்டின் கேளது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. -893
பெரியோர் சொல்கேட்டு, மதித்து நடந்தால் என்றும் கேடில்லை
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். - 894
அறிவுடையோருக்கு இன்னா செய்தல் எமனை அழைப்பது
போன்றது
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.-895
வேந்தனின் கோபத்துக்காளானவர்கள் எங்கும்
சென்று வாழமுடியாது
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.-896
தீயிலிருந்து கூட தப்பலாம், பெரியோருக்குப் பிழைசெய்து தப்பமுடியாது
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.-897
நல்வாழ்க்கையும், பெருஞ்செல்வமும் பெரியோர் சொல்லுக்குத் தாங்காது
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.- 898
மலைபோல வலிமையுடையாரை மதிக்காதவர் குடியுடன்
அழிவர்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். -899
நற்கொள்கையாளரின் சீற்றம் ஆட்சியையும்
இடையில் கவிழ்த்துவிடும்
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். - 900
பெருந்துணையுடைய வலிமையாளரும் பெரியோர்
சீற்றத்துக்கு தப்பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக