பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 13 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 89. உட்பகை

 


நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்றா செயின்.- 881

நிழலும், நீரும் சில நேரம் நோய்தருவதுபோல உறவுகளும் துன்பம்தரும்

வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. - 882

வாள்போன்ற வெளிப்பகையைவிட கேள்போன்ற உட்பகையை கொடியது

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும். - 883

உட்பகைக்கு அஞ்சி,காக்க, அது மட்கலத்தை அறுக்கும் கருவிபோன்றது

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா

ஏதம் பலவும் தரும். - 884

உட்பகையால் இருந்தால் குற்றங்கள் பல தோன்றும்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்   

ஏதம் பலவும் தரும். - 885

உறவினர்களால் தோன்றும் உட்பகை உயிருக்கே ஆபத்தாகும்

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது. - 886

ஒன்றியிருந்தவர்களிடம் உட்பகை வந்தால் எப்படியும் அழிவு தோன்றும்

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி. - 887

செப்பின் மூடிபோல புறத்தே சேர்ந்து அகத்தே பிரிந்திருப்பதே உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி. - 888

அரத்தால் தேயும் பொன்போல உட்பகையால் குடிச்சிறப்பு தேயும்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு. - 889

எள்ளின் பிளவைப் போன்ற சிறு உட்பகையும் குடியைக் கெடுத்துவிடும்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 

பாம்போடு உடனுறைந் தற்று.- 890

உட்பகையுடன் வாழ்தல் ஒரு குடிசையிற் பாம்புடன் வாழ்வது போன்றது

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக