நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்றா செயின்.- 881
நிழலும், நீரும் சில நேரம் நோய்தருவதுபோல உறவுகளும் துன்பம்தரும்
வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. - 882
வாள்போன்ற வெளிப்பகையைவிட கேள்போன்ற உட்பகையை
கொடியது
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். - 883
உட்பகைக்கு அஞ்சி,காக்க, அது மட்கலத்தை அறுக்கும் கருவிபோன்றது
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும். - 884
உட்பகையால் இருந்தால் குற்றங்கள் பல தோன்றும்
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். - 885
உறவினர்களால் தோன்றும் உட்பகை உயிருக்கே
ஆபத்தாகும்
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. - 886
ஒன்றியிருந்தவர்களிடம் உட்பகை வந்தால்
எப்படியும் அழிவு தோன்றும்
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. - 887
செப்பின் மூடிபோல புறத்தே சேர்ந்து அகத்தே
பிரிந்திருப்பதே உட்பகை
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. - 888
அரத்தால் தேயும் பொன்போல உட்பகையால் குடிச்சிறப்பு
தேயும்
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. - 889
எள்ளின் பிளவைப் போன்ற சிறு உட்பகையும்
குடியைக் கெடுத்துவிடும்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.- 890
உட்பகையுடன் வாழ்தல் ஒரு குடிசையிற் பாம்புடன்
வாழ்வது போன்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக