பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. - 871
பகைமையை விளையாட்டாகக் கூட விரும்பாதே
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.- 872
வில்வீரரைப் பகைத்தாலும் சொல்வீரரைப்
பகைக்காதே
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். -873
தனித்திருந்து பலர் பகையைத் தேடிக்கொள்வது
பெரும் மூடத்தனம்
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக் கண் தங்கிற்று உலகு.-874
பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளுபவனிடம்
இவ்வுலகம் அடங்கும்
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. - 875
துணையில்லா அரசன், தன் இரு எதிரிகளுள் ஒருவரை நண்பராக்குக
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். - 876
துன்ப காலத்தில் யாரையும் நம்பாதே, பகைக்காதே
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. -877
அன்பிலாதாரிடம் துன்பத்தையும், எதிரியிடம் பலவீனத்தையும் கூறாதே
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.- 878
வலிமையாலும் தற்காப்பாலும் மட்டுமே பகைவரின்
செருக்கு நீங்கும்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.- 879
முள்மரத்தை சிறிதாகவும், பகையை ஆரம்பத்திலும் நீக்கவேண்டும்
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.- 880
எதிரிகளை குறைவாக எண்ணி அழிக்காமல் விடுபவர், அழிவு உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக