பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 10 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 86. இகல்

 


இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய். - 851

மனவேறுபாடு என்னும் பண்பு எவ்வுயிர்க்கும் வரும் நோய்         

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை. - 852

மனவேறுபாட்டால் தீங்கு செய்தவனுக்கு நீயும் தீமை செய்யாதே   

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும். - 853

இகல் என்று மாறுபாட்டை நீக்குபவருக்கு நீங்காத புகழ் கிடைக்கும் 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். - 854

மாறுபாடு இல்லாதவர் இன்பத்துள் இன்பமாம் பேரின்பம் அடைவர்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலுக்கும் தன்மை யவர். - 855

மனமாறுபாட்டை ஆளத்தெரிந்தவரை யாரும் வெல்லமுடியாது  

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து. - 856

முரண்பட்டு வாழ்வதை விரும்புவோர் வாழ்க்கை கெட்டு அழியும்   

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர். - 857

பகையுணர்வு கொள்ளும் பேதையர் உண்மையை அறியார்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகலுக்கின் ஊக்குமாம் கேடு.- 858

மாறுபாடு கேடு, ஒருமைப்பாடே உயர்வு தரும்  

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு. - 859

உயர விரும்புபவன் மாறுபாட்டை விரும்பமாட்டான்

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு. - 860

மாறுபாட்டால் தீமையும், நட்பினால் நன்மையும் வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக