பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 9 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 85 புல்லறிவாண்மை

 


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.-841

அறிவின்மையே இன்மை எனப்படும். பிற இல்லாமைகள் பெரிதல்ல  

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம். -842

அறிவில்லாதவன் ஈகை, பெறுபவனின் தவப்பயனே தவிர வேறில்லை

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.- 843

எதிரிகளுக்கும் செய்யமுடியாத துன்பத்தை பேதையர் தமக்கே செய்வர்

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு. -844

தாம் அறிவுடையவர் என எண்ணுதல் சிற்றறிவின் அடையாளம்

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும். - 845

கல்லாததைக் கற்றதாக பேசுபவர் கூறும் உண்மையும் நம்பமுடியாது  

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி. - 846

தம் குற்றத்தை நீக்காதவர், உடலை ஆடையால் மறைப்பது அறிவின்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு. - 847

அறிவுரைகளைக் கேட்காதவன் தமக்குத் தாமே தீங்கிழைப்பான்

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய். - 848

சொல்புத்தியும், தன்புத்தியும் இல்லா வாழ்க்கை, உயிர்வலி தரும் நோய் 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு. - 849

தான் அறிந்ததே சரி என எண்ணுபவரிடம் பேசுவதால் பயனில்லை    

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். - 850

உலகத்தார் உண்டு என்பதை, ஏற்காதவன் பேயாகவே கருதப்படுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக